அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் பேசுகையில், ”மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அனுமதியை பெற்று தந்தது அ.தி.மு.க., அரசு தான். தமிழகத்தை மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாக மாற்றிய முழு பெருமையும், அ.தி.மு.க., அரசையே சாரும்,” என்றார்.
கடந்த 10 ஆண்டுகளில், 254 ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கி, நாட்டிலேயே வலுவான சுகாதார கட்டமைப்பை எங்கள் அரசு உருவாக்கியது,” என, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது:அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்க, மருத்துவ மாணவர் சேர்க்கையில், 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து, அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளில், 254 ஆரம்ப சுகாதார நிலையங்களை உருவாக்கி, நாட்டிலேயே வலுவான சுகாதார கட்டமைப்பை எங்கள் அரசு உருவாக்கியது. நான்கு ஆண்டுகளில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் என, 31 ஆயிரத்து 244 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஏழு சட்டக்கல்லுாரிகள், 21 பல்கலை தொழில்நுட்ப கல்லுாரிகள், நான்கு இன்ஜினியரிங் கல்லுாரிகள், ஐந்து கால்நடை மருத்துவக் கல்லுாரிகள், 40 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், 23 மருத்துவக் கல்லுாரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பு, 33 சதவீதமாக இருந்த மாணவர் உயர்கல்வி சேர்க்கை விகிதம், அ.தி.மு.க., ஆட்சியில், 51 சதவீதமாக உயர்ந்தது.இவ்வாறு, அவர் பேசினார்.