Home உலகம் அமெரிக்காவில் தடகள வீராங்கனை தாவி குதித்து கின்னஸ் உலக சாதனை

அமெரிக்காவில் தடகள வீராங்கனை தாவி குதித்து கின்னஸ் உலக சாதனை

by Jey

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த தடகள வீராங்கனை ஓல்கா ஹென்றி , ஹை ஹீல்ஸ் அணிந்து கயிற்றில் அதிக எண்ணிக்கையில் தாவி குதித்து செய்ததற்காக கின்னஸ் உலக சாதனையில் இடம் பெற்றார்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சாண்டா மோனிகா கடற்கரையில் தடகள வீராங்கனை இந்த சாகசத்தை ஒரு நிமிடத்தில் முடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த சாகசத்தை கின்னஸ் உலக சாதனையின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராமில் வீடியோவாக பகிரப்பட்டது. வீடியோவில், ஓல்கா திறமையாக கயிற்றில் கவனம் செலுத்துவதையும், குதிப்பதையும் காணலாம். அந்த பெண் தன்னை எப்படி முழுமையாகக் கயிற்றில் சமநிலையுடன் கையாளுகிறார் என்பது அதில் பதிவாகியுள்ளது.

ஒரு நிமிடத்தில் ஸ்லாக்லைனில் ஹை ஹீல்ஸ் அணிந்து அதிக எண்ணிக்கையிலான பம் பவுன்ஸ்கள் என தலைபிடப்பட்டுள்ள இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே 3 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. பெண்ணின் திறமை குறித்து மக்கள் பலர் பாராட்டுக்களையும் கருத்துகளையும் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில், பிரேசிலை சேர்ந்த ரபேல் ஜுக்னோ பிரிடி என்ற 34 வயது நபர், தரையில் இருந்து ஒரு மைல் உயரத்திற்கு மேல் ஒரு இறுக்கமான கயிற்றில் இரண்டு சூடான காற்று பலூன்களைக் கடந்து உலக சாதனையை முறியடித்தார்.இது உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிபாவின் உயரத்தை விட இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

related posts