Home உலகம் நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம்

நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம்

by Jey

நேட்டோ அமைப்பில் சேர மாட்டோம் என உக்ரன் உறுதியளித்தால் போர் தொடுக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவித்து வரும் ரஷியா, 2014ம் ஆண்டு உக்ரைன் வசம் இருந்த கிரைமியா பகுதியை பிரிவினைவாதிகள் மூலம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நாட்டு எல்லையை ஒட்டி ரஷியா தனது போர் விமானங்களை குவித்து வருவது தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதி அருகாமையில் போர் விமானங்களை குவித்துள்ளதாக இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

ரஷியாவின் போர் படைகள் உக்ரைனுக்கு அருகாமையில் உள்ள பெலாரஸ், கிரைமியா மற்றும் மேற்கு ரஷிய பகுதிகளில் திரட்டப்பட்டுள்ளன. இதன்மூலம் போர் மூளும் அபாயம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் எல்லையிலிருந்து வெறும் 20 கி.மீ தொலைவில் ரஷிய படைகள் முகாமிட்டுள்ளன.

இது தொடர்பான செயற்கைக்கோள் படத்தில் தெற்கு பெலாரஸில் கூடுதல் தளவாடங்கள் மற்றும் சப்ளைகளின் வரிசைப்படுத்தல் மற்றும் இயக்கத்தை படங்கள் காட்டுகின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் மக்சார் செயற்கைக்கோள் நிறுவனத்தால் எடுத்து வெளியிடப்பட்ட புகைப்படத்தில் உக்ரைன் நாட்டு எல்லைப்பகுதி அருகாமையில் உள்ள தெற்கு பெலாரஸ் மற்றும் மேற்கு ரஷிய பகுதிகளில் போர் விமானங்களை குவித்துள்ளதை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன. தெற்கு பெலாரஸ் மோசிர் பகுதியில் உள்ள ஒரு சிறிய விமானநிலையத்தில் 100 க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் டஜன் கணக்கான துருப்புக் கூடாரங்கள் அமைக்கப்பட்டௌள்ளன. இந்த விமானநிலையம் உக்ரைன் எல்லையில் இருந்து 40 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் அமைந்துள்ளது.

மேலும், மேற்கு ரஷியாவின் போசெப் பகுதியில் ராணுவ முகாம் அமைப்பதற்கு ஏதுவாக பெரிய நிலப்பரப்பு அழிக்கப்பட்டு உள்ளதை புகைப்படங்கள் காட்டுகின்றன. போர் தொடங்கினால் தேவைப்படும் மருத்துவமனை கூடாரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் எல்லையிலிருந்து 20 கி.மீ அருகாமையில் உள்ள கிராமப்புறங்களில் புதிதாக பல புதிய படைகளும் உபகரணங்களும் களமிறக்கப்பட்டுள்ளன. மேலும் உக்ரைன் எல்லையிலிருந்து 40 கி.மீ அருகாமையில் உகரைனுக்கு கிழக்கே ராணுவ பீரங்கி வண்டிகள் கனரக உபகரண டிரான்ஸ்போர்ட்டர்கள் (HETs), இவை டாங்கிகள், பீரங்கி மற்றும் கனரக உபகரணங்களை கொண்டு செல்ல பயன்படும் வண்டிகள் களமிறக்கப்பட்டுள்ளன.

 

related posts