கனேடிய வரலாற்றில் பயன்படுத்தப்படாத அவசரகாலச் சட்டத்தை உருவாக்கி கலகம் அடக்குவதற்கான அதிகஅதிகாரத்தை பெற்றிருந்தவர் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.
இந்த அவசரகாலச் சட்டம் கோவிட்-19 தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக பல வாரங்களாகமுன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களையும், கிளர்ச்சிகளையும் கட்டுப் படுத்த மேற் கொள்ளப் பட்டதாகும்.
கனேடியத் தலைநகர் ஒட்டாவா உள்ளிட்ட பல முக்கிய நகரங்களின் ஆர்ப்பாட்டக் கார்ர்கள் கைதாக்கப்பட்டுகிளர்ச்சி மட்டுப் படுத்தப்பட்ட நிலையில் கனடா அவசரகாலச் சட்டத்தை இன்றுடன் கைவிடுவதாகஅறிவித்துள்ளது.
இதன் பேரில் ரொறன்ரோ மேயரும் தன் மாநிலத்தில் இனி அவசரகாலச் சட்டம் அமூலில் இல்லை என்றார்.