Home உலகம் ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு

ஹிஜாப் வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு

by Jey

கர்நாடக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக முஸ்லிம் மாணவிகள் கர்நாடக ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்து, ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக அனுமதிக்கும்படி அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினர். இந்த மனுக்கள் மீது ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி மற்றும் நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பித்த ஐகோர்ட்டு, மாணவர்கள் மத அடையாள ஆடைகளை அணிந்து வர தடை விதித்தது.

ஹிஜாப் தடைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கர்நாடக அரசு தரப்பிலும், மனுதாரர்கள் தரப்பிலும் பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் கர்நாடக ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அக்கல்லூரி நிர்வாகம் தடை விதித்து உத்தரவிட்டது. இதை கண்டித்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர். மேலும் கர்நாடக அரசு மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்றும், பிற ஆடைகளை அணியக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

 

related posts