Home இந்தியா தான்சானியா நாட்டை சேர்ந்த கிலியும் நீமாவும் இந்திய இசையில் ஆர்வம்

தான்சானியா நாட்டை சேர்ந்த கிலியும் நீமாவும் இந்திய இசையில் ஆர்வம்

by Jey

தான்சானியா நாட்டை சேர்ந்த கிலியும் நீமாவும் இந்திய இசையில் ஆர்வம் காட்டியுள்ளனர். லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தி நமது தேசிய கீதத்தைப் பாடினர். அவர்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களைப் போலவே நம் குழந்தைகளும் அதையே செய்கிறார்கள்.

ரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார்.

அதன்படி, இந்த மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி காலை 11.30 மணிக்கு தொடங்கியது இதில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“இந்தியாவில் இருந்து பல சிலைகள் கடத்தி செல்லப்பட்டு, பல்வேறு நாடுகளில் விற்கப்பட்டன. அந்த சிலைகளை திரும்ப கொண்டு வருவது எங்கள் பொறுப்பு. 2013ஆம் ஆண்டு வரை 13 சிலைகள் மட்டுமே கொண்டுவரப்பட்டன. ஆனால் 2014ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட சிலைகளை இந்தியா கொண்டு வந்தோம்.

உடன்பிறந்த இரட்டையர்களான கிலி மற்றும் நீமாவை போல, பிரபலமான பாடல்களுக்கு ஏற்ப உதடுகளை ஒத்திசைத்து விடியோ எடுக்குமாறு அனைத்து மாநிலங்களில் உள்ள குழந்தைகள் கேட்டுக்கொள்கிறேன். ‘ஒரே இந்தியா வளமான இந்தியா’ என்பதை மறுவரையறை செய்து இந்திய மொழிகளை பிரபலப்படுத்துவோம்.

சிவராத்திரி, ஹோலி என பண்டிகைகள் நெருங்கி வருகின்றன. ‘உள்ளூர் பொருகள்களுக்கு முன்னுரிமை’ அளிப்பதை கடைபிடித்து, உள்ளூர் சந்தைகளில் இருந்து கொள்முதல் செய்து பண்டிகைகளை கொண்டாடுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். இந்த பண்டிகைகளை ஆனந்தமாக கொண்டாடுங்கள். ஆனால் எச்சரிக்கையாக இருக்க மறக்காதீர்கள்”

related posts