உக்ரைன் மீது பல முனைகளில் இருந்தும் ரஷியா குண்டு மழை பொழிந்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ் நகரத்தை வேகமாக முன்னேறி வரும் ரஷிய படைகள், உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரையும் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷியா விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, போலந்தின் வார்ஸா, துருக்கியின் இஸ்தான்புல், ஹங்கேரியின் புடாபெஸ்ட், அல்லது பாக்கூ, பிராடிஸ்லாவா என சில நகரங்களின் பட்டியலைக் கொடுத்து இங்கு ஏதாவது ஓரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
பல்வேறு உலக நாடுகள் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது பிப்ரவரி 24 முதல் போரை தொடர்ந்தார். உக்ரைன் வீரர்களும் விட்டு கொடுக்காமல் தங்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவ வீரர்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பொதுமக்கள் துப்பாக்கி ஏந்தி ரஷிய வீரர்களின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். உக்ரைனில் முறையான பயிற்சி இன்றி நாட்டை காக்க துப்பாக்கி ஏந்தியுள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் என அப்பாவிகளும் பலியாகி வருகின்றனர்.
இந்த நிலையில், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை உகரைன் நாடியுள்ளது. இது தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அதில், போர் சேதம் மற்றும் உயிரிழப்புக்கு ரஷியாவே முழு பொறுப்பேற்க வேண்டும். உக்ரைனில் இனப்படுகொலை நடப்பதாக சித்தரித்து போருக்கு வழிவகுத்து இருக்கிறது. அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு என்று எதிர்பார்க்கிறோம்”