Home இந்தியா எங்கள் தொண்டர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்

எங்கள் தொண்டர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்

by Jey

மாநில தலைநகர் கொல்கத்தாவில் இருந்து சுமார் 430 கிமீ தொலைவில் உள்ள பலூர்காட்டில் போலீசாருக்கும் பா.ஜனதா தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சித் தேர்தலில் நிகழ்ந்த வன்முறையைக் கண்டித்து பா. ஜனதா இன்று 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இன்று மாநிலம் முழுவதும் பா.ஜனதா முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பல இடங்களில் போக்குவரத்து முடங்கிள்ளது.

எங்கள் தொண்டர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர்.. அவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறை டிஎம்சியின் கேடராக செயல்படுகிறது, இது ஜனநாயகத்திற்கு எதிரானது” என்று வங்காள பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மாநிலந் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது. பீர்பூம், சிலிக்குரி, ஹூக்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் ரெரயில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் ரெயில்கள் செல்வது தாமதமானது. பல இடங்களில் வாகனப் போக்குவரத்து முடங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்காளத்தில், ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், கடைகள் திறந்திருந்தன மற்றும் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படவில்லை என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வடக்கு வங்காளத்தில் சில பகுதிகள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

related posts