தேர்தல் வெற்றி என்பது உங்களில் ஒருவனான எனக்கு, தமிழக மக்கள் தந்த பரிசு. ‘உங்களில் ஒருவன்’தலைவர், துணை தலைவர் தேர்தலில் கட்டுக் கோப்புடனும், ஒருமனதுடன் செயல்படுவது தான் கட்சியினரிடம் நான் எதிர்பார்க்கும் பரிசு.
உங்களுக்கு என் பிறந்தநாள் பரிசாக, ‘உங்களில் ஒருவன்’ என்கிற என் வரலாற்று புத்தகத்தின்முதல் பாகத்தை வெளியிடுகிறேன். நான் பிறந்த 1953ம் ஆண்டு முதல் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 1976ம் ஆண்டு வரையிலான, 23 ஆண்டு கால வாழ்க்கையை அதில் பதிவு செய்திருக்கிறேன்.
‘சமூக நீதி பயணத்தில்,தமிழகத்தை கடந்து நாடு முழுதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதல் கட்ட முயற்சியாகவே, அனைத்து இந்தியசமூக நீதி கூட்டமைப்பு துவக்கப்பட்டுள்ளது’ என, தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இன்று நடைபெறஉள்ள நுால் வெளியீட்டு விழாவிற்கு துரைமுருகன் தலைமை வகிக்கிறார். டி.ஆர்.பாலு முன்னிலை வகிக்கிறார். கனிமொழி வரவேற்கிறார். நுாலின் முதல் பிரதியை காங்., முன்னாள் தலைவர் ராகுல் வெளியிடுகிறார்.நுாலை வாங்கிப் படித்து கருத்துகளை தெரிவித்து, அடுத்த பாகத்தை நான் எழுதிட எனக்கு ஊக்கமும், ஆக்கமும் அளிக்க வேண்டும்.அன்பு கட்டளைமார்ச் 1ம் தேதி என் பிறந்த நாள்.
தொண்டர்கள் வாழ்த்தை பெற இருக்கிறேன். பிறந்த நாள் சந்திப்பு எனக்கு, என் பயணத்தை இன்னும் சிறப்பாகவும், வேகமாகவும், தமிழ் மக்களுக்கு பயனுள்ள வகையில் உரமாக அமைக்க உதவும். சமூக நீதி பயணத்தில் தமிழகத்தை கடந்து, நாடு முழுதும் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதற்கான முதல் கட்ட முயற்சியாகவே, அனைத்து இந்திய சமூக நீதி கூட்டமைப்பு துவக்கப்பட்டு உள்ளது.
நம் பயணம் நீண்டது, நெடியது; முடிவதில்லை. பிறந்த நாள் விழாவில் ஆடம்பரம் தலைகாட்டி விடக்கூடாது என்பது என் அன்பு கட்டளை.மக்களுக்கு பயனுள்ள நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். புத்தகங்களை வழங்குங்கள்; புதிய உறுப்பினர்களை சேருங்கள். திராவிட மாடல் அரசின் சாதனைகளை விரிவாக எடுத்து கூறுங்கள்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின்