Home இந்தியா அனைத்து ரயில்களிலும், மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்க வேண்டும்

அனைத்து ரயில்களிலும், மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்க வேண்டும்

by Jey

அனைத்து ரயில்களிலும், மாற்றுத் திறனாளிகள் பெட்டிகள் இணைக்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகம் முன், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், நேற்று முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

பின், சங்கத்தின் பொதுச்செயலர் நம்புராஜன், மாநில தலைவர் ஜான்சிராணி ஆகியோர், தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்யாவை சந்தித்து மனு அளித்தனர். ‘வரும், 7ம் தேதிக்குள் கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து தீர்வு காணப்படும்’ என, மல்யா உறுதி அளித்தார்.

ரயில்களில் மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி இணைப்பு தொடர்பாக, விரைவில் தீர்வு காணப்படும்’ என, தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் பி.ஜி.மல்யா உறுதி அளித்துள்ளார்.

related posts