Home கனடா கனடாவில் எரிபொருள்விலை உச்சம் தொட்டது! ரஸ்ய உக்ரேன் போரின் எதிரொலி!

கனடாவில் எரிபொருள்விலை உச்சம் தொட்டது! ரஸ்ய உக்ரேன் போரின் எதிரொலி!

by Sithivin

தேசம் தழுவி எரிபொருளுக்கான விலை நாளுக்குநாள் கனடாவில் ஏறிய வண்ணம் உள்ளது. கடந்த ஆண்டில்லிற்றர் ஒன்றின் சராசரி விலை 1.23 சதமாக இருந்தது. இப்போ லீற்றர் ஒன்று  2 டாலராகி விட்டது.

உக்ரேன் ரஸ்யப் போரின் விளைவாக ஏற்ப்பட்டிருக்கும் இந்தப் பொருளாதார நெருக்கடி எப்போ முடிவிற்குவரும் என்பது பலத்த கேள்விக் குறி.

இன்னிலையில் போரினால் பாதிக்கப் பட்ட உக்ரேன் மக்களுக்கான ஜீவாதார உதவிகள் மற்றும் ஆயுதஉதவிகள் செய்து வரும் கனடா அவர்கள் தஞ்சம் புகுவதற்கான புதிய வழிகளைத் திறந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் நியாயமற்ற தாக்குதலின் விளைவாக, ஒரு மில்லியன் மக்கள்உக்ரைனில் இருந்து வெளியேறியுள்ளனர்.

அவர்களை மனதில் கொண்டு , கனடா உக்ரேனின் புதிய குடியேற்ற வரவாளர்களை வரவேற்கக் காத்திருப்பதாக கனேடியப்  பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்

கூடுதல் எண்ணிக்கையிலான உக்ரேனியர்களை துரிதப் படுத்தப்பட்ட அவசரகால விசாக்களுடன் தற்காலிக அடிப்படையில் இந்த நாட்டிற்கு வரஅனுமதிப்பதற்கும், கனடாவில் ஏற்கனவே நிரந்தரமாகத் தங்கியுள்ளோருடன்  அவர்கள் குடும்ப உறவுகள்இலகுவாக ஒன்றிணையவும்  வழிவகை செய்யயப் பட்டுள்ளதாக பிரதமர்  மேலும் தெரிவித்தார்

அத்தோடு சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இன்டர்போலில் இருந்து ரஸ்ய நாட்டை இடைநீக்கம் செய்யவேண்டுமென்னும் கோரிக்கைகளை கனடா முன்வைத்துள்ளது.

related posts