சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா ஒரு பீப்பாய் 7.57 டாலர் அதிகரித்து 118 டாலரில் வர்த்தகமாகிறது. உக்ரைன் மீது தற்காலிக போர் நிறுத்தம் எந்த முன்னேற்றத்தையும் தரவில்லை என தெரிவித்துள்ள ரஷியா, மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்த அளவுக்கு எண்னெய் விலை அதிகரித்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் ரஷியாவின் கச்சா எண்ணெய்க்கு தடை விதித்தால் சர்வதேச சந்தையில் அதன் விலை 150 டாலர் வரை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில், உலகின் 3-வது மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளராக உள்ள ரஷியா, சர்வதேச சந்தையில் அதிக ஏற்றுமதி செய்யும் நாடாகவும் விளங்குகிறது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலையேற்றத்தால் , இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.