சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள கிசுயூ மாகாணத்தில் உள்ள சான்ஹூ நீலகிரி சுரங்கத்தில் கடந்த மாதம் 26 ஆம் திகதி 14 ஊழியர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக பயங்கர விபத்து நடந்தது.
விபத்து நடந்த பகுதி சுரங்கத்தின் நுழைவாயிலில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரம் இருந்துள்ளது. இதனால் மீட்பு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒரு வாரத்திற்கு பிறகு 14 பேரின் உடலும் சடலமாக இன்று மீட்கப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சமீப காலமாக சீனாவில் நிலக்கரி சுரங்களில் தொடர்ந்து வெடிப்பு மற்றும் வாயுக் கசிவுகளால் விபத்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.