Home உலகம் உக்ரைனின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம்

உக்ரைனின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம்

by Jey

உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் இன்று 11-வது நாளாக நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உக்ரைனின் கெர்சன் உள்ளிட்ட சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன. மேலும் அந்நாட்டின் 2 அணுமின் நிலையங்களும் ரஷியா வசம் சென்றுள்ளது.

சிறிய நகரங்களை ரஷியா பிடித்திருந்தாலும் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக உள்ளன. அந்நகரங்களில் தாக்குதல் கடுமையாக இருந்து வருகிறது. ஏவுகணை வீச்சு, வான் வெளி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கீவ், கார்கிவ் நகருக்குள் ரஷிய படையினர் புகுந்து சண்டையிட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவமும் கடுமையாக போராடி வருகிறது. இதனால் இந்த 2 நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் இருந்து வருகிறது.

இதற்கிடையே, ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்ய படைகள் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். இது குறித்து செலன்ஸ்கி கூறுகையில், “ பிடிபட்ட ரஷிய ராணுவ வீரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வரைபடங்கள், ஆவணங்கள் உக்ரைன் வசம் உள்ளன. ரஷிய வீரர்கல் ஒடேசா நகரம் மீது குண்டு வீச திட்டமிட்டுள்ளனர்” என்றார்.

related posts