இருப்பினும் உக்ரைன் வீரர்கள் தொடர்ந்து வீரத்துடன் எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.மக்கள் வெளியேறுவதற்கு வசதியாக மரியுபோல் மற்றும் வோல்னவாகாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்யப் படைகள் அறிவித்திருந்தன. ஆனால் அதை மீறி, மரியுபோல் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தலைநகர் கீவ் நகருக்கு அருகே உள்ள செர்னிகிவ் பகுதியில் குடியிருப்புகள் மீது, ரஷ்யப் படைகள் ஏவுகணைகள் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தப் போரால் உக்ரைனில் இருந்து, 14 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு வெளியேறிஉள்ளதாக கூறப்படும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், அரசின் உத்தரவை ஏற்று ராணுவத்தில் இணைந்து வருகின்றனர்
.கடந்த 2014ல் உக்ரைனிடமிருந்து கிரீமியா பகுதியை, ரஷ்யா கைப்பற்றியது. அதற்கு அருகில் உள்ளதால், மரியுபோலைக் கைப்பற்றினால், நாட்டின் தென் பகுதி முழுதும் அதன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இதையடுத்தே, மரியுபோலில் தன் தாக்குதலை அது தீவிரப்படுத்தியுள்ளது.மரியுபோல் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளதாகக் கூறப்படுகிறது
. மின் தடை உள்ளதால், ‘மொபைல் போன் டார்ச்’ மூலமாக டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதாக செய்தி கள் தெரிவிக்கின்றன.இதற்கிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளதாவது:நம் மீது போர் திணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைக்கு உக்ரைன் தலைமை தான் காரணம். நம் படைகள் முன்னேற விடாமல் தடுப்பதன் வாயிலாக போரை தீவிரப்படுத்தி வருகின்றனர்.தற்போது செய்து வருவதை தொடர்ந்தால், உக்ரைன் என்ற ஒரு நாடே இருக்காது. அந்த நிலைமை ஏற்பட்டால் அதற்கு அவர்களே முழு பொறுப்பு.நம் நாட்டின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளா தார தடையை விதித்துஉள்ளன.
இதன் மூலம் நம் நாட்டுக்கு எதிராக அவர்கள் போர் தொடுத்து உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.”மக்கள் குடியிருக்கும் பகுதிகளில், 500 கிலோ எடையுள்ள குண்டுகளை ரஷ்யா வீசி வருகிறது. ”பள்ளிகள், வழிபாட்டு தலங்கள் என அனைத்தையும் சேதப்பட்டு வருகின்றனர்,” என, நாட்டு மக்களுக்கு ‘டிவி’ வாயிலாக ஆற்றிய உரையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் நல்ல நட்பில் உள்ள இஸ்ரேல் பிரதமர் நப்டாலி பென்னட், ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோவில் புடினைச் சந்தித்து பேசியுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி உதவ தயாராக உள்ளதாக அவர் கூறியுள்ளதாக தெரிகிறது. ஆனால், இதற்கு புடின் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.இர்பின் நகரில் தாக்குதல்உக்ரைன் தலைநகர் கீவ் அருகேயுள்ள இர்பின் நகரை குறிவைத்து, ரஷ்ய படைகள் நேற்று கடும் தாக்குதல் நடத்தின.
தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். மீண்டும் போர் நிறுத்தம்மரியுபோல் மற்றும் வோல்னவாகாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்யப் படைகள் அறிவித்திருந்தன. ஆனால், அங்கு தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன
.இந்நிலையில் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இந்த நகரங்களில் போர் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷ்யா மீண்டும் அறிவித்துள்ளது. ஆனால், எத்தனை நாளைக்கு என்ற விபரம் வெளியிடப்படவில்லை.இதற்கிடையே ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே இன்று மூன்றாம் கட்ட பேச்சு நடக்க உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த இரண்டு சுற்று பேச்சுகள் பெலாரசில் நடந்தன. மூன்றாம் சுற்று பேச்சு எங்கு நடக்க உள்ளது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.