Home கனடா பால்டிக் நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் – ட்ரூடோ

பால்டிக் நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் – ட்ரூடோ

by Jey

பால்டிக் நாடுகளுக்கு ஆதரவளிக்கப்படும் என கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ உறுதி மொழி வழங்கியுள்ளார்.

லத்வியாவில் வைத்து ரஸ்ய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள மூன்று நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

உக்ரேய்னுக்கு மட்டுமன்றி பால்டிக் நாடுகளுக்கும் ஆதரவு வழங்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பால்டிக் நாடுகள் மீது ரஸ்யா முன்னெடுத்து வரும் சைபர் தாக்குதல்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லத்விய பிரதமர் Krisjanis Karinsஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுடன்  ஏனைய பால்டிக் நாடுகளான லித்துவேனியா மற்றும் எஸ்டோனியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடன் மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.

பிரதமரின் இந்த லத்விய விஜயத்தில் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்தும் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts