கனடா, அமெரிக்கா உட்பட 17 நாடுகளை ரஸ்யா தன் நட்புப் பட்டியலில் இருந்து தூக்கி வீசியது!
அதே வேளை கனேடிய அரசு ரஸ்யா மீது மேலும் பல புதிய தடைகளை இறுக்குகிறது !
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில், தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிரானநிலைப்பாட்டை எடுத்ததால், கனடா உட்பட 17 நாடுகளை தான் நிராகரிப்பதாக ரஸ்யா எச்சரித்துள்ளது.
இன்னிலையில் இங்கிலாந்திற்கு (07 மார்ச் 2022) விஜயம் செய்த கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே ஆகியோர் முன்னிலையில் ரஸ்ய அதிபருக்கு நெருக்கமான 10 நபர்கள் மீது கனடா புதிய தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளார்.
அவர்களில் மூத்த ரஷ்ய அரசாங்க உயர் அதிகாரிகள், மற்றும் ரஷ்ய தலைமையின் ஆதரவாளர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் உள்ளனர்.
உக்ரைன் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தான் தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள இந்தப் போர் 12-வது நாளாக நீடிக்கிறது. இதுவரை பல மில்லியன்உக்ரேனியர்களை அகதிகளாக்கிச் சீரழித்துள்ள இப்போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதே அனைத்துதரப்பினரும் எதிர்பார்ப்பாக உள்ளது.