Home இந்தியா 11 மாடி கட்டடம் கண் முன் இடிந்து தரைமட்டமானதை கண்டு மிரண்டு போனோம் ..

11 மாடி கட்டடம் கண் முன் இடிந்து தரைமட்டமானதை கண்டு மிரண்டு போனோம் ..

by Jey

அழகன்குளம் நவாஸ் அலி, ஆயிஷா அம்மாள் மகனான முகமது ஆதீம் உக்ரைன் கார்கிவ் தெற்கு மிக்லேவ் நகரில் மருத்துவக்கல்வி நான்காம் ஆண்டு படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் பத்து நாட்களாக அங்கிருந்த முகமது ஆதீம், இந்திய அரசின் ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மீட்கப்பட்டு நேற்று அழன்குளம் திரும்பினார்.அவர் கூறியதாவது: போர் மூண்டதும் பிப்., 24 முதல் மார்ச் 3 வரை 8 நாட்கள் மருத்துவக் கல்லுாரி விடுதி அண்டர் கிரவுன்டில் 260 மாணவர்கள் தங்கியிருந்தோம்.

உக்ரைனில் ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சில் 11 மாடி கட்டடம் கண் முன் இடிந்து தரைமட்டமானதை கண்டு மிரண்டு போனோம் என ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் திரும்பிய மருத்துவ மாணவர் முகமது ஆதீம் 22, தெரிவித்தார்.

சுற்றுப்பகுதிகளில் தொடர்ந்து குண்டு வீசும் சத்தம் கேட்ட படி இருந்தது.ரஷ்ய விமானங்களின் குண்டு வீச்சில் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட் நொறுங்கி விழுந்தது. தடைமட்டமான 11 மாடி குடியிருப்பிலிருந்தவர்கள் முன்பே வெளியேற்றப்பட்டதால் தப்பினர். உணவு பற்றாக்குறை, மின்சாரம் இன்றி தவித்தோம். நெட்வொர்க் கிடைக்காததால் வெளியுலக தொடர்பும் துண்டிக்கப்பட்டது.தமிழக அரசு கட்டுப்பாட்டு அறை மூலம் வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி 400 பேர் இணைக்கப்பட்டு மீட்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 12 கி.மீ., நடந்தே ருமேனியா எல்லைக்கு 66 மாணவர்கள் சென்றோம்.

வழி நெடுகிலும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டது.எல்லையிலிருந்து பஸ்சில் விமான நிலையம் அழைத்து சென்றனர். அங்கிருந்து ஏர் இந்தியா விமானத்தில் டில்லி வழியாக சொந்த ஊருக்கு வந்தேன். மாணவர்களை பாதுகாப்பாக மீட்ட பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்றார்.மானாமதுரைமானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பாண்டியின் 2வது மகள் பார்கவி உக்ரைன் தலைநகர் கீவ் மருத்துவ பல்கலையில் 5ம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். போர் நடந்ததால் இந்திய மாணவர்களுடன் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பதுங்கி இருந்தனர். மகளை மீட்க கோரி கலெக்டர் மதுசூதன்ரெட்டி மூலம் அரசுக்கு பாண்டி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்தியர்களை மீட்கும் விமானம் மூலம் பார்கவி டில்லி வழியாக நேற்று மானாமதுரை வந்து சேர்ந்தார். பெற்றோர் கூறுகையில்,’மகளை பத்திரமாக மீட்டு வந்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி,’ என்றனர்.இந்தியரை விரட்டும் போலந்துராமேஸ்வரம்: ராமநாதபுரம் அருகே உச்சிப்புளி தர்காவலசை சேர்ந்த துரைராஜ் மகள் கோசிகா குட்டீஸ் 22, உக்ரைனில் மருத்துவம் படிக்கிறார். சொந்த ஊருக்கு திரும்பிய அவர் கூறியதாவது: நான் தங்கியிருந்த கிரவோஹார்டுநகரில் பிப்., 25 முதல் ரஷ்யா தாக்குதலை துவக்கியது.

தரை தளத்தில் இருந்த வீட்டில் தங்கி பல இரவுகள் துாங்காமல் இருந்தோம். பிப்., 28ல் பஸ்சில் புறப்பட்டு போலந்து செல்ல இருந்தோம். ஆனால் அந்நாட்டு ராணுவம் இந்தியர்களை உள்ளே விடாமல் விரட்டியடித்தது. இதனால் இரண்டு நாட்கள் பயணித்து ஹங்கேரி சென்றோம். அங்கு உணவு, தங்கும் வசதி செய்து கொடுத்தனர். பின் மத்திய அரசின் விமானம் மூலம் டில்லி வந்தோம். உக்ரைனில் பல கல்லுாரி கட்டடங்கள், எண்ணெய் கிணறுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் இடிந்து சின்னாபின்னமாகி கிடக்கின்றன. மருத்துவ படிப்பை இந்தியா, பிற வெளிநாட்டில் தொடர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

related posts