Home உலகம் 4 நகரங்களில் மேலும் போர்நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு

4 நகரங்களில் மேலும் போர்நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு

by Jey

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டித்து பொருளாதார தடைகளை விதித்துள்ள ஐரோப்பாவிற்கு இயற்கை எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை நிறுத்த நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ராணுவ வீரர்களின் குடும்ப பெண்கள் அனைவரும் தியாகத்தை நினைத்து பெருமை கொள்ள வேண்டும் என ரஷ்ய அதிபர் நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரையில் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது: நமது ராணுவ வீரர்கள் பெருமை தரும் பணியை மேற்கொண்டுள்ளனர்.

போரில் ஈடுபட்டுள்ள வீரர்கள், அதிகாரிகள் ஆகியோர்களின் அன்புக்குரியவர்களான மனைவிகள், சகோதாரிகள் ,நண்பர்கள் அனைவரது உணர்வையும் நான் அறிந்துள்ளேன். நீங்கள் யாரும் கவலை கொள்ளாமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பதாக எண்ணி உறவுக்காரர்களும் பெருமை கொள்ள வேண்டும். போரில் யாரும் கட்டாயபடுத்த மாட்டார்கள். இவ்வாறு புடின் கூறியுள்ளார்.

உக்ரைனில் கியூ, செர்னிவ், சுமி, மரியூபால் ஆகிய 4 நகரங்களில் மேலும் சில மணி நேரங்கள் போர்நிறுத்தம் செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய மேஜர் ஜெனரல் பலி

உக்ரைன் கார்கிவ் நகரில் நடந்த தாக்குதலில் ரஷ்ய மேஜர் ஜெனரல் ஒருவர் கொல்லப்பட்டதாக உக்ரைன் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

related posts