தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் பலர் ஆழ்கடல் வரை சென்று மீன்பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த மீன்வர்கள் கேரளாவின் கொச்சி துறைமுகத்தையும், மகாராஷ்டிரா, அந்தமான் உள்ளிட்ட துறைமுகங்களையும் தங்கு தளமாக கொண்டு மீன் பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் குமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்தவரின் படகு மூலம், மீனவர்கள் சிலர் அந்தமானில் இருந்து ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, இந்தோனேசியாவின் கடல் எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி அந்த படகில் இருந்த 8 மீனவர்களை செய்துள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தோனேசியா கடற்படையினர் அவர்களை கைது செய்து, அந்நாட்டின் நீதிமன்றத்தில் ஒப்படைத்ததோடு, மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளனர். மேலும் அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான விசாரணை இந்தோனேசியா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.