இலங்கையில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள இயற்கை எரிவாயு திட்டத்தை நடைமுறைப்படுத்த தயாராகி வருவதாக அமெரிக்காவின் நியூ போர்ட்டர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் செய்துக்கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கைக்கு அமைய கொழும்பு அருகில் இயற்கை எரிவாயு முனையம் ஒன்றை நிர்மாணிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
கெரவலப்பிட்டிய யுகதனவி உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த நிறுவனம், நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டிள்ளது.
கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்திற்கு எரிவாயுவை விநியோகம் செய்யும் உரிமை நிறுவனத்திற்குரியது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் இலங்கை அரசுக்கு தினமும் 1.2 மில்லியன் கொள்கலன்கள் வழங்கப்படவுள்ளன. எதிர்காலத்தில் இலங்கையில் சுத்தமான எரிபொருள் மற்றும் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கவும் திட்டமிட்டுள்ளதாக நியூ போர்ட்டர்ஸ் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.