போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன், ரஷியா இடையிலான மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. ஆனால் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன்-ரஷியா இடையே 15- நாளாக போர் நடந்து வரும் நிலையில், துருக்கியில் ரஷ்யா, உக்ரைன் வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்று தோல்வியிலேயே முடிந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை போரை முடிவுக்கு கொண்டு வருமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22