உலக உணவுத் திட்டம் கனேடிய அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளது.
உக்ரேய்ன் மீது ரஸ்யா படையெடுத்த காரணத்தினால் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, உலகின் முன்னணி கோதுமை ஏற்றுமதி நாடுகளில் ஒன்றான கனடா, உதவிகளை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளது.
எத்தியோப்பியா, யேமன், சூடான் போன்ற பல்வேறு நாடுகளில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரேய்ன் – ரஸ்ய போர் காரணமாக உலக அளவில் கோதுமை விநியோகத்தில் ஏற்படக்கூடிய தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
லெபனான், பங்களாதேஷ் உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் உக்ரேய்னின் கோதுமையை நம்பியிருப்பதனால், இந்தப் போர் உலக அளவில் உணவுப் பிரச்சினையை உருவாக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே கோதுமை விநியோகத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு உலக உணவுத் திட்டம், கனடாவிடம் கோரியுள்ளது.