Home கனடா ரொறன்ரோப் பெரும்பாகத்தை அச்சுறுத்தும் போதைப் பொருள் பாவனை ! பலர் பரிதாப மரணம்!!

ரொறன்ரோப் பெரும்பாகத்தை அச்சுறுத்தும் போதைப் பொருள் பாவனை ! பலர் பரிதாப மரணம்!!

by Sithivin

சமீப காலமாக ரொறன்ரோவில் என்றுமில்லா வகையில் போதை மருந்திற்கு அடிமையானோரின் அவலச்சாவுகள் பெருகி வருவது அச்சம் தருகின்றது.

ரொறன்ரோ நகரின் மையப்பகுதியில் போதைப்பொருளை அதிகமாக உட்கொண்ட நான்கு பேர் சமீபத்தில்இறந்ததை அடுத்து, ரொறன்ரோ பொலிசார் பொதுமக்களை எச்சரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் 4 ந்திகதியிலிருந்து மார்ச் 9 ந் திகதி வரையான நாட்களுக்கிடையே  போதைப் பாவனையாளர்கள்4 பேர் மரணித்தும் மற்றும் 9 பேர் மிக அபாயகரமான கட்டத்திலிருப்பதாகவும் ரொறன்ரோ காவல்துறையினர்தெரிவித்துள்ளார்கள்.

போதைப்பொருட்களை, போதை ஊசிகளை பயன்படுத்துவோர் தீவிர எச்சரிக்கையுடன் பயன்படுத்துமாறும்அளவிற்கு அதிகமாக பயன்படுத்த வேண்டாமெனவும் ரொறன்ரோ பொலிஸ் பிரிவினர் பொதுமக்களைஎச்சரித்துள்ளனர்.

கட்டுப்பாடற்று போதையை உட்கொண்ட பிறகு எவராவது நோய்வாய்ப்பட்டால், மருத்துவமனையின்  அவசரஅறைக்குச் செல்ல 911 அழைக்கவும் அல்லது சிகிச்சைக்காக உடனடியாக வாக்இன் கிளினிக்கிற்குச்செல்லவும் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

இந்த சமீபத்திய போதைப்பொருள் பாவனை பற்றிய மேலதிக தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையை 416-808-5100 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், அல்லது குற்றத் தடுப்புபிரிவினரின்  அநாமதேயத் தொடர்பான 416-222-8477 (TIPS) என்ற எண்ணிலோ அல்லது ஆன்லைனில்222tips.com லோ தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

related posts