எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இராணுவ செலவுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா பிரிலாண்ட் இந்த விடயம் தொடர்பில் ஊகமொன்றை வெளியிட்டுள்ளார்.
உலக அளவில் பூகோள அரசியல் மற்றும் பூகோள பொருளியல் நிலைமைகள் பாரியளவில் மாற்றமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்யா, உக்ரேய்ன் மீது படையெடுத்தமை ஐரோப்பா மற்றும் உலக நாடுகளை அதிர்வலைக்குள் தள்ளியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஓர் பின்னணியில் பாதுகாப்புச் செலவுகள் உன்னிப்பாக அவதானிக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென பிரிலாண்ட் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவிற்கு விஜயம் செய்துள்ள பிரிலாண்ட், பேர்ளினின் வைத்து ஊடகவியலாளர்களிடம் இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.