உக்ரேய்ன் ஜனாதிபதி வொலாடைமர் ஸெலன்ஸ்கீ கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அவர் கனேடிய நாடாளுமன்றில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக ஸெலன்ஸ்கீ உரையாற்ற உள்ளார்.
செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் இந்த உரை நிகழ்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறுவதற்கான நிகழ்ச்சி நிரல் இல்லாத நிலையில், உக்ரேய்ன் ஜனாதிபதி உரையாற்றுவதற்காக ஏற்பாடுகளை செய்யுமாறு ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளர் மார்க் ஹோலன்ட், சபாநாயகரிடம் கோரியுள்ளார்.
உக்ரேய்ன் மக்களின் அவல நிலைமைகளை நேரடியாக ஜனாதிபதியின் ஊடாக அறிந்து கொள்ள இந்த உரை ஓர் வாய்ப்பாக அமையும் என தெரிவித்துள்ளார்.
இந்த உரை நிகழ்த்தப்படும் நாடாளுமன்றிற்குள் அதிதிகளை அனுமதிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.