தன்டர்பே பொலிஸ் சேவையை கலைக்குமாறு பூர்வகுடியின தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது சமூகத்திற்கு குறித்த பொலிஸ் நிலையத்தின் ஊடாக சேவை கிடைக்கும் என்பதில் நம்பிக்கையில்லை என பூர்வகுடியினத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் பொறுப்புடன் தங்களது கடமைகளை உரிய முறையில் செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பூர்வகுடியின மக்கள் மீது திட்டமிட்ட அடிப்படையில் இனக்குரோத செயற்பாடுகளை பொலிஸார் கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் இது தொடர்பில் ஆதாரபூர்வமாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இடம்பெற்ற 14 பூர்வகுடியின மக்களின் மரணங்கள் தொடர்பில் மீள்விசாரணை நடாத்துமாறு அறிக்கைகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.