பிரிட்டிஷ் கொலம்பியாவில் கட்டாய முகக் கவச சுகாதார நடைமுறை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பரவுகையை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ளக பொது இடங்களில் முகக் கவசங்கள் அணிந்திருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் வாரங்களில் கோவிட் தடுப்பூசி சான்றிதழ் நடைமுறையும் நீக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கோவிட் சுகாதார கட்டுப்பாடுகள் எவ்வாறு நீக்கப்படும் என்பது குறித்து மாகாண சுகாதார அமைச்சர் டொக்டர் போனி ஹென்றி இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார்.
நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைவடைந்து செல்வதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் தொடர்ந்தும் முகக் கவசம் அணிதல் அவசியம் என்ற போதிலும் ஏனைய ஆபத்து குறைந்த இடங்களில் முகக் கவசம் அணிதல் கட்டாயமில்லை என தெரிவிக்கப்படுகின்றது.