பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.மார் 100 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட தீர்மானத்தை அந்நாட்டு நாடாளுமன்ற செயலரிடம் அளித்தனர்.
பாகிஸ்தான் சட்டப்படி, 68 எம்.பி.க்கள் தீர்மானம் அளித்தால் மூன்று முதல் ஏழு நாள்களுக்குள் நாடாளுமன்றத்தைக் கூட்டி வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.
பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. பிரதமராக இம்ரான்கான் பொறுப்பேற்றார்.
பாகிஸ்தானில் ஏற்கனவே பல்வேறு பொருளாதார சிக்கல்கள் நீடித்து வந்த சூழலில் இம்ரான்கான் பதவியேற்ற பின்னர் அங்கு நிலைமை மேலும் மோசமானது. அரசின் பல்வேறு துறைகள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இதனால் சர்வதேச நாடுகளிடம் இருந்து அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் உருவானது. அப்படி வாங்கிய கடன்களை திருப்பி செலுத்த முடியாமல் பாகிஸ்தான் அரசு திணறி வருகிறது.
இதற்கிடையில் எதிர்க்கட்சிகள் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசை பதவி விலகக்கோரி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்த நெருக்கடிகளையெல்லாம் சமாளித்து ஆட்சியை நடத்துவதற்காக இம்ரான்கான் அரசு பல்வேறு அவசர சட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
நாடாளுமன்ற அமர்வு நடைபெறாத சமயத்தில் அவசரகால சூழ்நிலைகளில் மட்டுமே பிறப்பிக்கப்பட வேண்டிய இத்தகைய அவசர சட்டங்களை ஆட்சி நடத்துவதற்காகவே இம்ரான்கான் அரசு அடிக்கடி அமல்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த வகையில் ஆட்சியை தொடங்கிய 2018-ம் ஆண்டில் இருந்து தற்போது வரை 54 அவசர சட்டங்களை இம்ரான்கான் அரசு அமல்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இம்ரான்கான் அரசுக்கு எதிராக அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் காசி பயீஸ் இசா மற்றும் அமினுத் தின் கான் ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது இருதரப்பு வாதங்களை முழுமையாக கேட்டறிந்த நீதிபதிகள் அவசர சட்டங்களை பிறப்பிக்கும் விவகாரத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக தீர்ப்பளித்தனர்.