தென்கொரியாவில் கொரோனா வைரஸ் மற்றும் ஓமைக்ரான் பரவலால், நாடு முழுவதும் சுனாமி அலைபோல எழுச்சி பெற்று கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
இதுவரை உலக அளவில் 45.56 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 60.58 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அந்நாட்டு சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,83,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் தென்கொரியாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 62,06,277 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் மேலும் 269 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.