ஒன்டாரியோவின் முன்னாள் கன்சர்வேடிவ் (கனடாவின் பழமைவாதக் கட்சி Conservative Party of Canada – PC ). தலைவரும், ஒன்ராறியோப் பிராம்ரனின் தற்போதைய மேயருமான பற்றிக் பிரவுண் வரும் ஞாயிற்றுக்கிழமை13 ந்திகதி மார்ச் காலை 11 மணிக்கு பிராம்ப்டனில் தனது கட்சியின் தலைமைத்துவ வேட்பாளராவதற்கான தன்உறுதிப்பாட்டை வெளியிடவுள்ளார்.
Brampton’s Queen’s Manor Event Centre at around 11 a.m. on Sunday, according to an invitation being distributed via Eventbrite.
கனேடிய கன்சர்வேடிவ் கட்சிக்கான புதிய தலைவர் செப்டம்பர் 10 ஆம் திகதி தேர்வு செய்யப்படுவார். ஆனால்அதற்காகப் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏப்ரல் 19 ஆம் திகதிக்குள் தங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட வேட்பாளர்களில் ஒட்டாவா எம்பி பியர் பொய்லிவ்ரே, முன்னாள் கியூபெக்பிரீமியர் ஜீன் சாரெஸ்ட் மற்றும் ஹால்டிமண்ட்–நோர்போக் எம்பி லெஸ்லின் லூயிஸ் ஆகியோரும் அடங்குவர்.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒவ்வொரு வேட்பாளரும் கட்சியின் உறுப்பினர்களிடமிருந்து குறைந்தபட்சம்500 கையொப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அத்தோடு விண்ணப்பதாரர்கள் மொத்தம் $300,000, கனேடியடாலர்களையும் செலுத்த வேண்டும் இதில் பதிவுக் கட்டணமாக $200,000 டாலர்களும் மற்றும் $100,000 டாலர்கள் திரும்பப் பெறவல்ல இணக்க வைப்புத்தொகையாகவும் இருக்கும்.
2018 லிருந்து பிராம்ரன் நகரை உலகின் முன்னணி நகரங்களில் ஒன்றாக்க பெரிதும் உழைத்தவர் பற்றிக்பிறவுண். புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் சீக்கிய மக்களிடம் மிகுந்த அபிமானம் பெற்றவர் அவர். கடந்தகாலங்களில் துரதிஷ்ட வசமாக அவர் மீது சுமத்தப்பட்ட அபகீர்த்திகளில் எந்த ஆதாரமும் இல்லை என கனேடியமுன்னணி தொலைக்காட்சி நிறுவகமான CTV ஸ்தாபனம் அறிவித்ததை தொடர்ந்து அவரின் அரசியல்பரப்புரை முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேயர் பற்றிக் பிறவுண் அவர்களின் “கனடியர்களுக்கான முக்கியமான அரசியல்” அறிவிப்பு இது எனக் குறிப்பிடும் பிராம்ரன் அரசியல் அவதானிகளோடு Tamil review செய்தி நிறுவகமும் அவரை வாழ்த்துகின்றது.