கனேடிய மக்களின் உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நடாத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
கோவிட் பெருந்தொற்று நிலைமைகளினால் இவ்வாறு கடந்த இரண்டு ஆண்டு காலப் பகுதியில் மக்களின் உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்களது உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பெருந்தொற்று காலத்தில் தமது உளச்சுகாதாரம் பாதிக்கப்பட்டதாக ஆய்வில் பங்கேற்ற 60 வீதமான பெண்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் நிச்சயமற்ற நிலைமையை உணர்வதாகவும், மன அழுத்தங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் ஆய்வு நடத்திய நிறுவனம் தெரிவித்துள்ளது.