Home இந்தியா கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்

கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும்

by Jey

இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தந்து தனது டுட்டரில் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில், பச்சை நிற பாம்பு ஒன்று தாகத்தில் இருக்கின்றது.

அதற்கு இளைஞர் ஒருவர் தனது கைகளில் நீரை ஊற்றி பாம்பின் தாகம் தீர்க்கிறார். தாகம் தீர்ந்தவுடன் தண்ணீர் அருந்துவதை பாம்பு நிறுத்திக் கொள்கின்றது. இந்த வீடியோ பலரின் கவனம் பெற்று வைரலாகி உள்ளது.

இந்த வீடியோவின் தலைப்பில் இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா ஒரு விழிப்புணர்வு பதிவையும் பதிவு செய்துள்ளார்.

அதில், ”கோடை காலம் நெருங்குகிறது. சிறு துளி தண்ணீர் கூட ஒருவரின் உயிரைக் காப்பாற்றும். உங்கள் தோட்டத்தில் சிறிது தண்ணீரை ஒரு பாத்திரத்தி வைக்கவும் அது பல விலங்குகள் உயிர் வாழ வழி வகை செய்யும்” என பதிவு செய்துள்ளார்.

related posts