உக்ரைனில் சிக்கித் தவித்த சீனாவைச் சேர்ந்தவர்களை மீட்க சென்ற தற்காலிக விமானம் சீனாவின் சாங்தாங் மாகாணத்தில் இன்று பாதுகாப்பாக வந்து சேர்ந்தது.
இதுவரை 11 தற்காலிக விமானங்கள் மூலம் உக்ரைனில் சிக்கித்தவித்த சீனர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24-ந்திகதி படையெடுத்த ரஷியா தொடர்ந்து 18-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்து உள்ளனர்.
போரை முன்னிட்டு பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். உக்ரைனிலிருந்து இதுவரை 20 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக வெளியேறி உள்ளனர்.