உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் தற்காலிகமாக உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.
உக்ரைனில் நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
போலாந்தில் உள்ள இந்திய தூதரகம் போலாந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.