மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவின் டாங்க்ரா பகுதியில் தோல் பதனிடும் தொழிற்சாலைக்கு சொந்தமான குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் தீ மளமளவென தோல் தொழிற்சாலை பகுதி முழுவதும் பரவியது.
தகவல் கிடைத்ததும் 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு சென்றதாகவும், குறுகிய பாதை காரணமாக, தீயணைப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக மேற்கு வங்க தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் தெரிவித்துள்ளார்.
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு அதிகாரிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் தீயணைப்புப் படையினருக்கு அந்த பகுதி உள்ளூர் மக்கள் உதவி செய்தனர். விபத்து குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டறிந்தார்.
தீயணைப்பு அலுவலர் டெப்தானு கோஷ் கூறுகையில், ”குடோனில் அதிக தீப்பற்றக்கூடிய பொருட்கள் இருப்பதால், உள்ளே செல்ல முடியாததால், 10 மணி நேரமாகியும் தீ முழுமையாக அணைக்கப்படவில்லை. அணைக்கும் பணியின் போது இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், மேற்கு வங்க முதல்-மந்திர் மம்தா பானர்ஜி டாங்க்ரா தீ விபத்து குறித்து விசாரணை நடத்த உயர் அதிகாரக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார்.