எரிவாயு விலை அதிகரிப்பு காரணமாக அநேகமான கனேடியர்கள் பொதுப் போக்குவரத்து பயன்பாட்டை அதிகரித்துள்ளனர்.
நாடு முழுவதிலும் எரிவாயு விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எரிபொருள் செலவினை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்கள் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஒரு தொகுதியினர் சொந்த வாகனங்களை பயன்படுத்துவதனை தவிர்த்து பொதுப் போக்குவரத்தினை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
பிரிட்டிஷ் கொலம்பியா உள்ளிட்ட சில பகுதிகளில் ஏற்கனவே ஒரு லீற்றர் எரிவாயுவின் விலை 2 டொலர்களாக உயர்வடைந்துள்ளதுடன், ஒன்றாரியோ, கியூபேக் போன்ற மாகாணங்களிலும் வெகுவாக எரிவாயு விலை உயர்வடைந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான கனேடியர்கள் தங்களது நாளாந்த போக்குவரத்து தேவைகளுக்கு பொதுப் போக்குவரத்துப் பயன்படுத்துவதனை அதிகரித்துக் கொண்டுள்ளனர்.