ஒன்றாரியோவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஒன்றாரியோவின் மேற்கு குயின்டின் பகுதியின் 401ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவம் காரணமாக அதிவேக நெடுஞ்சாலை பல மணித்தியாலங்கள் மூடப்பட்டிருந்தது.
விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்துச் சம்பவத்தில் ஐந்து இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.