கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைப் பதவிக்காக போட்டியிடப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் பீட்டர் மெக்கேய் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் கட்சியின் தலைமைப் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக உறுப்பினர்களுடன் கலந்தாலோசனை செய்ததன் பின்னர் இந்த தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக மெக்கேய் தெரிவித்துள்ளார்.
இடைக்காலத் தலைவர் கென்டிஸ் பெர்கனுக்கு தாம் ஆதரவளிக்கப் போவதாகவும் தலைவராக தெரிவாகும் யார் என்றாலும் அவருக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப் போவதாகவும் மெக்கேய் தெரிவித்துள்ளார்.