Home கனடா ரஸ்யா போர்க் குற்றம் இழைப்பதாக கனடா குற்றச்சாட்டு

ரஸ்யா போர்க் குற்றம் இழைப்பதாக கனடா குற்றச்சாட்டு

by Jey

ரஸ்யா உக்ரேய்னில் போர்க் குற்றம் இழைப்பதாக கனேடிய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

அண்மையில் உக்ரேய்னில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 35 பேர் கொல்லப்பட்ட சம்பவம் மன்னிக்கப்பட முடியாதது எனவும் இது ஓர் போர்க் குற்றம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஸ்யா சிறுவர்களையும் குடும்பங்களையும் கொன்றொழிப்பதாகவும் இது தெளிவான போர்க் குற்றச் செயல் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

கடந்த வார இறுதியில் ரஸ்யா, உக்ரேய்னில் அமைந்துள்ள சர்வதேச அமைதி காக்கும் மற்றும் பாதுகாப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தியிருந்தது.

இந்த நிலையத்தில் கனேடிய படையினர், பயிற்சிகளை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கனேடிய படையினர் உக்ரேய்னை விட்டு வெளியேறியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

related posts