உக்ரேய்னில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் கனேடியர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
கடந்த வார இறுதியில் ரஸ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கனேடிய பிரஜை காயமடைந்துள்ளார்.
தன்னார்வ அடிப்படையில் குறித்த நபர் உக்ரேனில் ரஸ்யாவிற்கு எதிரான போரில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த நபருக்கு செவிப்புலனில் குறைபாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த கனேடியர் உக்ரேய்னுக்கு அருகாமையில் உள்ள நாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.