மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்தம், 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான ‘சம்யுக்த கிசான் மோர்ச்சா’வின் தொடர் போராட்டத்தால் திரும்ப பெறப்பட்டது.
அப்போது, மத்திய அரசின் சார்பில் வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான குழு அமைப்பது, விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.
மத்திய அரசின் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி, விவசாயிகள் கூட்டமைப்பினர் 21ல் தேசிய அளவில் போராட்டம் அறிவித்து உள்ளனர்.
இந்நிலையில், சம்யுக்த கிசான் மோர்ச்சா நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று நடைபெற்றது. இதில், வாக்குறுதிகள் நிறைவேற்றாத மத்திய அரசை கண்டித்து, 21ம் திகதி தேசிய அளவில் போராட்டம் நடத்தப் போவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.