உக்ரேய்ன் போரில் குறிப்பிடத்தக்களவு கனேடியர்குள் இணைந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரஸ்ய படையெடுப்புக்கு எதிராக சர்வதேச தன்னார்வப் படைப் பிரிவு உக்ரேய்னுக்கு ஆதரவளித்து வருகின்றது.
இந்தப் படைப்பிரிவில் குறிப்பிடத்தக்களவு கனேடியர்கள் அங்கம் வகிக்கின்றனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் நியாயமான அளவு புலம்பெயர் உக்ரேய்னியர்கள் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே உக்ரேய்ன் – கனேடியர்கள் இவ்வாறு போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆயிரக் கணக்கான தன்னார்வ படையினர் உக்ரேய்னுக்கு ஆதரவாக போர்க் களத்தில் குதித்துள்ளனர்.