கனடாவிடமிருந்து கூடுதல் உதவிகளை எதிர்பார்ப்பதாக உக்ரேய்ன் ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
கனேடிய நாடாளுமன்றில் மெய்நினர் தொழில்நுட்பத்தின் ஊடாக ஆற்றிய உரையின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கனேடிய நகரங்கள், பிராந்தியங்களில் தாக்குதல் இடம்பெறுவதாக கருதி உதவுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஒவ்வொரு இரவும் பீதி மிகுந்த இரவாக உக்ரேய்ன் மக்கள் கடக்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கூடுதலாக எதனையும் கோரவில்லை எனவும், நீதியை மட்டுமே கோருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக 97 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யா, உக்ரேய்ன் மீது குண்டுத் தாக்குதல் நடாத்துவதனை தடுக்க வான் பரப்பினை கனடா மூட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.