Home இந்தியா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சம்பாதித்த வேலுமணி

வருமானத்துக்கு அதிகமாக சொத்து சம்பாதித்த வேலுமணி

by Jey

வேலுமணியும், அவருடைய குடும்பத்தினரும், பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்ல, சட்டவிரோதமாக சம்பாதித்த பணம் செலவிடப்பட்டு உள்ளதாகவும், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலுமணி அமைச்சராக இருந்தபோது, 2019ம் ஆண்டில் மட்டும், சிங்கப்பூருக்கு மூன்று முறை சென்று, 14 நாட்கள் தங்கியுள்ளார்.மலேஷியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், பிரிட்டன், மாலத்தீவு நாடுகளுக்கும் சென்று, 32 நாட்கள் இருந்துள்ளார்.

கடந்த 2016 சட்டசபை தேர்தலில் வேலுமணி போட்டியிட்ட போது, தாக்கல் செய்த சொத்து விபரம் மற்றும் 2021ல் தாக்கல் செய்த சொத்து விபரங்களை, லஞ்ச ஒழிப்பு துறையினர் ஒப்பிட்டு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதை கண்டறிந்து, முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில், தனியாகவும், மனைவி வித்யாதேவி, மகன் விகாஸ், மகள் சாரங்கி என குடும்பத்தினர் இணைந்தும், ஹாங்காங், மலேஷியா, தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், பிரிட்டன், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகளில் மொத்தம் 130 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 1.25 கோடி ரூபாயை, வேலுமணி செலவழித்திருப்பதாகவும், முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts