Home உலகம் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை

ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை

by Jey

ரஷியாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவின் முடிவு அமெரிக்காவின் பொருளாதார தடையை மீறிய செயல் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் பசாகி செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டார். அப்போது கூறுகையில், “ நாங்கள் பரிந்துரைத்துள்ள மற்றும் அறிவித்துள்ள பொருளாதார தடைகளை அனைத்து நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்பதே நாங்கள் அறிவிக்கும் செய்தி ஆகும்” என்றார்.

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் மீது நடத்தப்படும் இந்த தாக்குதல் 21-வது நாளை எட்டியுள்ளது. உக்ரைன் – ரஷியா போர் உலக அளவில் பொருளாதார தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது . கச்சா எண்ணெய் விலையை பொறுத்தவரையில் ஒரு பீப்பாய் 100 டாலர், 110 டாலர் என விலை உயர்ந்தது. உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கிய பிறகு தற்போது 40% வரை உயர்ந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியாவின் சந்தையிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிய திருப்பமாக ரஷியாவிடம் இருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி முதல்கட்டமாக 30 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க இந்தியன் ஆயில் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்போது, ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கப்போவதாக வெளியாகும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இக்கேள்விக்கு பதிலளித்த ஜென் பசாகி, “ இந்தியாவின் நடவடிக்கை பொருளாதார தடையை மீறியதாக நான் கருதவில்லை. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது, இந்தியாவை வரலாற்றில் தவறான பக்கத்தில் நிறுத்தும்” என்றார்.

related posts