கோவிட் தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பயணிகளுக்கு பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்குள் பிரவேசிக்கும் பயணிகளுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்குள் வருகை தரும் காலத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அண்மைய வாரங்களில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் பணிகளில் தொற்று உறுதியாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் விமான நிலையங்களில் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை பத்து வீதமாக காணப்பட்ட நிலையில் தற்பொழுது அது ஒரு வீதமாக குறைவடைந்துள்ளது.