Home கனடா உக்ரேய்ன் ஏதிலிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கனடா

உக்ரேய்ன் ஏதிலிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் கனடா

by Jey

உக்ரேய்ன் ஏதிலிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக கனடா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கனேடிய குடிவரவு அமைச்சர் சீன் ப்ராசர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

வழமையான ஏதிலி அந்தஸ்து வழங்கும் நடைமுறைகளுக்கு முரணான வகையில்  கூடுதல் எண்ணிக்கையானவர்களுக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட உள்ளது.

மூன்றாண்டு காலம் உக்ரேய்ன் ஏதிலிகளுக்கு இவ்வாறு கனடாவில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையில் 90000 உக்ரேய்னியர்கள் கனடாவை வந்தடைந்துள்ளனர்.

ஆயிரக் கணக்கான உக்ரேய்ன் பிரஜைகள் ஏதிலி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்வார்கள் என கனேடிய அசராங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

related posts