கனேடியர்கள் செலவு குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு தொடர்பில் மக்கள் கூடுதல் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய 80 வீதமானவர்கள் மளிகைப் பொருட்களை கொள்வனவு செய்வதனை குறைத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கருத்துக் கணிப்பில் பங்குபற்றிய மூன்றில் ஒரு பகுதியினர் வீட்டில் சமைப்பதனை வரையறுத்துக் கொண்டு கடைகளில் உணவு உட்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
இலத்திரனியல் வாகனம் கொள்வனவு செய்வதற்கும் ஓர் குறிப்பிட்ட தரப்பினர் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.