98 வயதான உக்ரைன் பாட்டி ரஷியாவுக்கு எதிராகப் போரிட ராணுவத்தில் சேர முன்வந்துள்ளார்.ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா என்ற 98 வயதான பாட்டி ஒரு போர் வீரர் மற்றும் இரண்டாம் உலக போரில் தீவிரமாக பங்கேற்றார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீது படையெடுப்பிற்கு உத்தரவிட்ட பிறகு, ஓல்ஹா தனது தாய்நாட்டைப் பாதுகாக்க இராணுவத்தில் சேர முன்வந்தார். துரதிர்ஷ்டவசமாக, அவரது வயது காரணமாக மறுக்கப்பட்டது.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என ஐ.நா. மனித உரிமைகளுக்கான தூதரகம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து, உக்ரைன் வெளியுறவு அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில், “இரண்டாம் உலகப் போரின் வீரரான ஓல்ஹா ட்வெர்டோக்லிபோவா(98 வயது) தனது வாழ்க்கையில் 2வது முறையாக போரை எதிர்கொண்டார்.
அவள் மீண்டும் தனது தாய்நாட்டைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாள், ஆனால் எல்லா தகுதிகளும் அனுபவமும் இருந்தபோதிலும், வயது காரணமாக மறுக்கப்பட்டது. அவர் விரைவில் கியேவில் மற்றொரு வெற்றியைக் கொண்டாடுவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்” என பதிவிடப்பட்டுள்ளது.